ரணிலின் புதிய திட்டம் - சஜித்தின் பதவி நவீனுக்கு
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார நடவடிக்கைகள் உட்பட அனைத்து வேலைகளையும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்க அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதேசமயம் பிரதமர் வேட்பாளர் என்று எவரையும் பெயரிடாமல் இருக்கவும் ,யானை சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்க கோருவதென்றும் அவர் தீர்மானித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அதற்கிடையில் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை செய்வதற்கும் தீர்மானித்துள்ள ரணில் ,சஜித் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தால் அவரின் பிரதித் தலைவர் பதவியை நவீன் திஸாநாயக்கவிற்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்களை செய்யவும் தீர்மானித்துள்ள ரணில் கட்சியின் இளைஞர்கள் சிலருக்கு அமைப்பாளர் பதவிகளை வழங்கவும் உத்தேசித்துள்ளார்.
சஜித்தின் கூட்டம் நடந்து முடிந்தது.
இதேவேளை கட்சியின் எம் பிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தார்.
சஜித் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உருவாகவேண்டுமென்று இங்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியபோதும் தயா கமகே ,முஜிபுர் ரஹ்மான் ,காவிந்த ஜயவர்தன ஆகிய உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவது சிறந்ததென வலியுறுத்தியுள்ளனர் என்று அறியமுடிந்தது.

Post a Comment