பிரபல சிங்கள நடிகர் கைது
பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா கைது இன்று அதிகாலை தலங்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.45 மணியளவில் பத்தரமுல்ல- பன்னிப்பிட்டிய வீதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரை தமது வாகனத்தில் மோதிய பின் தப்பி சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து நடந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றபோது குறித்த நடிகரின் காரை அங்கு நின்ற குழுவினர் நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர் மீகாஹெதென்னவில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேக நபர் கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

Post a Comment