வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோன தொற்று நோயாளி
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர் தப்பி ஓடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரானா வைரஸ் இருப்பவர்களுக்கு தோன்றும் அதீத காய்ச்சல் மற்றம் கடுமையான இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இவருக்கு இருந்துள்ளது. அத்துடன் அவர் கட்டாரில் வேலை செய்த போது சீனர்களுடன் சேர்ந்தே வேலை செய்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனால் வைத்தியர்கள் அவருக்கு கொரானோ தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போதே நேற்றுக்காலை அவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

Post a Comment