Header Ads

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். 

உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வௌியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர் அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்தார்.

பிலிப்பைன்ஸ் வருவதற்கு முன்பே அவர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

அந்த சீனருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்திருக்கிறது. இதனை அடுத்து அவர் மணீலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நபருடன் ஒரு சீனப் பெண் வந்தார். அவரும் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவுக்கு வெளியே பதிவாகி உள்ள முதல் மரணம் இது என்கிறார் உலக சுகாதார அமைப்பின் பிலிப்பைன்ஸ் பிரதிநிதி ரபிண்ட்ரா.

மேலும் அவர், "இது உள்ளூரில் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. அந்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்திலிருந்து வந்திருக்கிறார்" என்றார்.

சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்த சில மணி நேரங்களில் இந்த மரணம் பதிவாகி உள்ளது.


Powered by Blogger.