Header Ads

ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த கட்சியில் தலைவர் தான் முழு அதிகாரம் படைத்தவர்.

ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை.

பெயருக்கு மட்டுமே ஜனநாயகம் உள்ளது.

இந்த கட்சியில் தான்தோன்றித்தனமாக தலைவர் மாத்திரமே முடிவுகளை எடுக்கின்றார்.

இதனால் எமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவாக இருக்கும் என கூறினார்.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-
Powered by Blogger.