Header Ads

சைவர்களை கேலியாக பேசிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்


வவுனியா அரிசி ஆலை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (16.02.2020) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மறவன்புலவு சச்சினாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நாங்கள் சென்று நாங்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்தோம். எங்களுடைய பகுதியில் ஒர் பிரச்சனையுள்ளது வாருங்கள் எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என தெரிவித்தோம்.

அதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என்ன பிரச்சனை என வினாவினார். எங்களது பகுதியில் ஒர் பிள்ளையார் ஆலயம் உள்ளது அதற்கு முன்பாக அந்தோனியார் சிலையினை வைக்கின்றனர், விவேகானந்தர் சிலையினை உடைக்கின்றனர் என தெரிவித்தோம்.

இதன் போது அந்த பாராளுமன்ற உறுப்பினர் வேப்பமரத்தினையும் மா மரத்தினையும் கல்லையும் மண்ணையும் வணங்கும் உங்களுக்கு இது எல்லாம் தேவையா என தெரிவித்தார் சைவ மக்களின் வாக்குகளை பெற்று சைவருடைய ஆதரவினை பெற்று தெரிவான ஓர் நாடாளுமன்ற உறுப்பினர்.

திருக்கேதீஸ்வர வளைவு எந்தவோரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை இது சைவர்களுடைய மனத்தினை புன்படுத்திய ஓர் நிகழ்ச்சி. அவர்கள் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளனரா? அல்லது பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனரா? வன்னியில் தெரிவான எந்தவோரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட திருக்கேதீஸ்வர வளைவினை பற்றி பேசியது கிடையாது ஆனால் வளைவினை உடைத்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

யார் வாக்குகளில் அவர்கள் தெரிவானவர்கள் யார் அவர்களை தெரிவு செய்தனர். சைவ மக்களே தெரிவு செய்தனர். சைவ மக்களிடம் வாக்கு கேட்டனர். வாக்களித்தார்கள் இது போல சைவ சமயத்தினை இல்லாமல் செய்யும் நிறைய விடயங்கள் வடக்கில் உள்ளன.
Powered by Blogger.