திடீரென இன்று மாலை செயற்குழுவை கூட்டும் ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை இன்று (28) மாலை 03.00 கூட்டுவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டிய விதம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பின் போதே இவ் அழைப்பை ரணில் ஏற்றுகொண்டுள்ளார்.

Post a Comment