சஹ்ரான் பயன்படுத்திய கெப் ரக வாகனம் மீட்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய கெப் ரக வாகனம் புத்தளம், வனாத்துவில்லு பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வனாத்துவில்லு பயிற்சி முகாம் தொடர்பில் சி.ஐ.டியினர் முன்னெடுக்கும் விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, இந்த கெப் வண்டி நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கெப் வண்டி வனாத்துவில்லு பயங்கரவாத முகாமிலிருந்து வெடிப்பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும், குறித்த முகாமுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment