Header Ads

யானையும் இல்லை இதயமும் இல்லை - இன்று மாலை சஜித் மற்றும் ரணில் இணைந்து எடுத்த தீர்மானம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.


இன்று -14- மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளார்.

இன்று மாலை இரண்டு தரப்பினருக்கும் இடையில் சிறிகொத்தவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.