Header Ads

சீனாவில் மாணவர்களை காப்பற்றிய விமானிகளின் பிள்ளைகளை விரட்டும் பாடசாலை

கொரோனா வைரஸ் பரவிச்செல்லும் சீனாவின் வூஹான் நகரில் சிக்கி இருந்த இலங்கை மாணவர்கள் 33 பேரை அழைத்து வந்த விமானிகளின் பிள்ளைகளை  இரண்டு வாரங்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அவர்களின் அதிபரினால் உத்தரவிட்டுள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக மெதகொட அஹயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் (02) ராஜகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மெதகொட அஹயதிஸ்ஸ தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கூறியுள்ள தேரர்

" வூஹான் நகரத்திற்கு விமானத்தை கொண்டு சென்று மரணத்தின் நகரில் நமது இலங்கை மாணவர்களை காப்பாற்றி இலங்கைக்கு கொண்டுவந்த விமானத்தின் விமானிகளின் பிள்ளைகளை 14 நாட்களுக்கு பாடசாலைக்கு வர வேண்டாம் என ஏதோ ஒரு பாடசாலையில் அதிபர் கூறியதாக எனக்கு அறியக்கிடைத்தது.

அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன்- இந்த  எச்சரிக்கையை வேண்டுமென்று பரப்புவதற்காகவோ பரப்பிக்கொள்வதற்காகவோ முயற்சிக்கும் நபர்கள் அல்ல - கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தான் அந்த விமானிகள் இருவரும் அந்த விமான நிலையத்திற்கு சென்றது தேவையான பாதுகாப்பு ஆடைகளை அணிந்துக்கொண்டே. அந்த விமானிகளின் பிள்ளைகளை பாடசாலைக்கு வரவேண்டாம் என யாரவது அதிபரொருவர் கூறுவாராயின் அந்த அதிபர் குறித்து மீண்டும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

நன்றி சொல்லாத ஒரு தேசம் இல்லாமல் உலகம் ஒருபோதும் சிறப்பாக இருக்காது. எங்கள் நன்றியுணர்வாக நாங்கள் இங்கு இருப்பது அற்புதம். " என தேரர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.