Header Ads

தனது அறியைும் அனுபவத்தையும் ஜனாதிபதிக்கு வழங்க ஆரம்பித்தார் மைத்திரி

குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் பாராளுமன்றத்தை கலைத்த பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


"தற்போது இந்த முறையில் பாராளுமன்றத்தை கொண்டு செல்ல இயலாது. இப்போது பாராளுமன்றத்தின் காலம் முடிந்துள்ளது. நேற்று இறுதிநாள். அதனால் மார்ச் மாதம் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை கலைத்த
பின்னர், விசேடமாக நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத பணத்தை பெறுதற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது, ”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் விடயத்தை நேற்று முன்தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்ரிபால சிறிசேன  குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும், தனது அறிவையும் அனுபவத்தையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு வழங்க அரசியலில் தங்கியிருப்பதாகவும் அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் இப்போது தனது அறிவை கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார் என்று தெரிகிறது.
Powered by Blogger.