ரணிலை நம்பிய பௌசிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்தி கட்சி உறுப்பனரான அவர், கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக சுதந்திர கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்குவதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் அவருக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் முஜிபுர் ரஹ்மான், மற்றும் எஸ்.எம் மரிக்கார் ஆகிய இருவரும் போட்டியிடுகின்ற நிலையில் மூன்றாவது முஸ்லிம் நபர் ஒருவருக்கு வேட்புமனு வழங்கப்படுவதிலேயே சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
அதேவேளை மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்த்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் முஜிபுர் ரஹ்மான், மற்றும் எஸ்.எம் மரிக்கார் ஆகிய இருவரும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், பௌசிக்கு தேசிய பட்டியலிலாவது இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Post a Comment