நாடு மற்றும் மக்களே நாட்டின் பிரச்சினை
நாட்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அன்றி பொதுமக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று சிலர் அரசியல் கட்சிகள் தொடர்பில் பேசுகின்றனர். அரசியல் கட்சிகள் அல்ல இந்நாட்டின் பிரச்சினை. நாடு மற்றும் மக்களே நாட்டின் பிரச்சினை. அதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் கட்சிகளை கட்டிப்பிடித்துக் கொண்டு சண்டையிடுவது அல்ல.
இன்று நாடு இருக்கும் நிலையில் இருந்து எவ்வாறு மீட்பது. பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி நாட்டை கட்டியெழுப்புவது? அங்குதான் நாம் செல்ல வேண்டும் என்றார்.

Post a Comment