தேரர்களின் கோரிக்கைபடி ரிஷாத்தை கலட்டிவிட்ட சஜித் - ரிஷாத் எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தீர்மானித்துள்ளார்.
மகா சங்க தேரர்களின் கோரிக்கைப் படி எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் அறிவித்ததற்கமைய அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அதன்படி ரிஷாத் பதியுதீனின் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
வடக்கி - கிழக்கிலும், களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ரிஷாத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Post a Comment