Header Ads

08 நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு

கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்காக ஹோமாகம வைத்தியசாலையை முழுமையாக ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

 இதற்கமைய அவிஸ்ஸாவெல்ல, பாதுக்க, கொஸ்கம, கரவநெல்ல, அத்துருகிரிய, ஹொரன, நவகமுவ மற்றும் வேத்தர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்தால் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்று வைத்திய சிகிச்சைக்குட்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 1990 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.