Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 9 பேர் நேற்றைய தினம் வரையில் நோய் தொற்றிலிருந்து பூரணமாக குணப்படுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார்.
Powered by Blogger.