ரணிலின் விமானப் பயணத்துக்கான கட்டணம் இத்தனை இலட்சமா?
கடந்த நல்லாட்சி அரசங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் அலுவலகம் பாவித்த இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் பயணங்களுக்கான கட்டணம் பதினெட்டு இலட்சத்து ஐம்பது ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்கு ரூபா (1855944) நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய கொள்கை, பொருளாதார நடவடிக்கை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விருத்தி அமைச்சு பயன்படுத்திய விமானப் பயணக்கட்டனமாக 13 இலட்சத்து 14 ஆயிரத்து நூற்று அருபத்தாறு ரூபா (1,314,166) உள்ளது.
மேலும் பிரதமர் அலுவலகம் பயன்படுத்திய விமான பயணங்களுக்கு ஐந்து இலட்சத்து 41 ஆயிரத்து 778 ரூபா (541778) நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment