இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ரோபோ
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வதற்காக இலங்கையிலுள்ள மருத்துவமனை ஒன்று ரோபோவை பயன்படுத்திவரும் செய்தி வைரலாகப் பரவிவருகிறது.
கொழும்பின் புறநகராகிய ஹோமாகம மருத்துவமனையில் இந்த ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நோயாளர்களை அறையில் சென்று பார்த்து மருத்துவ அறிக்கை செய்ய உதவுதல், மருத்துவர்களின் ஆலோசனைகளை நோயாளர்களுக்கு வழங்குதல், மருந்துகளை வழங்கல் போன்றவை ரோபோ மூலம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ரோபோவை இலங்கை தொழில்நுட்ப நிறுவனமொன்று தயாரித்திருப்பது இன்னுமொரு ஆச்சரியமான செய்தியாகும்.
இதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கின்ற அதிகாரிகள், வெளிநாடுகளில் விற்பனை செய்வதாயின் 5 மில்லியன் ரூபா வரை செல்லும் என்று கூறியிருக்கிறார்கள்.

Post a Comment