நாளை வர்த்தக நிலையங்களை திறக்க முடியுமா? அரசாங்கத்தின் அறிவிப்பு
நாளை வர்த்தக நிலையங்களை திறக்க முடியுமா? அரசாங்கத்தின் அறிவிப்பு
நாளை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தும் நீடிக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் மாத்திரமே நீடிக்கப்பபடும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எனினும் சுகாதார சேவையாளர்களுக்கு நாளை வழமைபோன்று சாதாரணமான வேலை தினமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் வழமை போன்று இயங்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது வர்த்தக நிலையங்களை வழமை போன்று திறக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவுமாயின் மாத்திரம் அரச அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment