Header Ads

கொரோனா வைரஸின் உருவம் இதுதான்

இந்தியாவால் முதலாதாக கொரோனா வைரஸின் உருவத்தைக் காட்டும் படம் வௌியிடப்பட்டுள்ளது.

“கொவிட் -19′ எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொரோனா வைரஸின் உருவம் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.

சாதாரண கண்களால் காண முடியாதவற்றை மிகவும் துல்லியமாக படம்பிடிக்க கூடிய அதி நவீன நுண்ணோக்கி (microscope) மூலம் இந்தப் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







Powered by Blogger.