Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றினால் முதல் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


60 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறு நீரக பொருத்தும் சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதுடன், கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உயிரிழந்த முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 101 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Powered by Blogger.