Header Ads

இலங்கையின் பிரபல ஒன்லைன் விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு - பாரிய மோசடிகள் அம்பலம் (வீடியோ)

இணையத்தளம் ஊடாக, பொருள்களை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த கொழும்பின் பிரபல தனியார் (ஒன்லைன் விற்பனை நிலையமான கப்றுகா) வர்த்தக நிலையம், இன்று பகல் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்(CID) மற்றும் நுகர்வோர் விவகார சபையின் அதிகாரிகள் இன்று கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், இதுபோன்ற முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக நுகர்வோர் விவகார சபையின் இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய பொதுமகன் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 100 ரூபாய்க்கு விலை குறைப்பு செய்யப்பட்ட செமன் டின்னை 550 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 500 ரூபாய்க்கும் பருப்பு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதென நுகர்​வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை கீழெ காணலாம்.



Powered by Blogger.