ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விபரத்துடன்
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல் துறை ஊரடங்கு உத்தரவு மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளை காலை (27) 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது.
எனினும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கருதி அதிக ஆபத்தான வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தமைக்கு அமைய காவல் துறை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மாவட்டங்களில் திங்கள் (30) 6.00 மணிக்கு இவ்வூரடங்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment