இன்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்த விடயங்கள்
அரச மற்றும் தனியார் துறைகளிலுள்ள நிறைவேற்று அதிகாரமற்ற உத்தியோகத்தர்களின் வேதனத்தில் மாதாந்த கடன் கொடுப்பனவு நீக்கமானது அடுத்த மாதத்திலிதுந்து நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரச துறையினருக்கு மார்ச் மாத வேதனமானது வழமையாக ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி வழங்கப்படுகின்றது.
மத்திய வங்கி கடந்த 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வகையில் மாதாந்த கடன் கொடுப்பனவுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்கு இரத்து செய்து அறிக்கை வெளியிட்டது.
எனினும் மார்ச் மாத்திற்கான வேதனம் கடந்த 23 ஆம் திகதியே செலுத்தப்பட்டமையினால் வங்கிகளில் மாதாந்த கடன் கொடுப்பனவு கடன்பட்டோரின் கணக்குகளிலிருந்து கழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த மாதம் முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அமுலாகும் வகையில் மாதாந்த கடன் தொகை நீக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் அவசரகால நிலையிலும் பாராளுமன்றத்தைக் கூட்ட எந்த தீர்மானம் இல்லையென பந்துல குணவர்தன கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போதுவரையில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சுகாதார வேலைத்திட்டங்கள் போதுமானதாக இருப்பதாகவும் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.
இறுதியாக கூடிய சர்வகட்சி கூட்டத்தில் அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் பாகுபாடு இல்லாது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அதேபோல் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுக்கும் அளவிற்கு அரசாங்கம் பலவீனமாக செயற்படவில்லை.

Post a Comment