Header Ads

கொரோனாவை வெற்றிகரமாக எதிர்ககொள்ளும் இலங்கை - மேலும் நான்கு பேர் பூரணமாக குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நால்வர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் கொழும்பு IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முழுமையாக குணமடைந்து வெளியேறிய நால்வரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட ஒருவர், சீனப்பெண், 24 வயதுடைய இலங்கை பெண், மற்றும் இன்றைய தினம் நான்கு ஆண்கள் மொத்தமாக எழுவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

95 பேர் தொடர்ந்தும் அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.