Header Ads

மேலும் சில நாடுகளுக்கு தடை விதிப்பு - விமான நிலையத்தை மூட ஆலோசனை

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை விமான நிலையத்தை மூடிவிட ஆலோசனை இடம்பெற்றுவரும் அதேவேளை இதுதொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.