கொரோனா... திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் கர்நாடகாவில் அனைத்து சினிமா அரங்கங்கள், வணிக வளாகங்கள், திருமண நிகழ்ச்சிகள், என பொது மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.முன்னதாக கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்திருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் எடியூரப்பா மாநில அமைச்சர்களுடன் இன்று அவசர சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே பெங்களுரூ நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் பெங்களுரூ கிளையை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்களை அவரவர் இல்லத்தில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 64 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Post a Comment