கொரோனா தொற்றுக்கு ஆளான இரண்டாவது நபரும் அடையாளம் காணப்பட்டார்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது அங்கொடையிலுள்ள IDH தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் தங்கியிருந்த பிரிதொரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.
44 வயதுடைய குறித்த நபரும் தற்பொழுது அங்கொடையிலுள்ள IDH தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 வயதுடைய குறித்த நபரும் தற்பொழுது அங்கொடையிலுள்ள IDH தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment