Header Ads

பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் போலி செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தொற்று இருப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகபூர்வ செய்திகளை மட்டும் நம்புமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர் .

ஏற்கனவே கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள நபரின் மகனுக்கு அந்த தொற்று பீடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.