இறுதித் தருவாயில் சஜித் விடுத்த கோரிக்கை ரணிலால் நிராகரிப்பு
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் மங்கள சமரவீர ஆகியோர், இன்று மாலை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது விரிசல் நிலை உள்ளதால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பொதுக் கூட்டணியை ஏற்று இணையும்படி இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்றால், கூட்டணியைக் கலைத்துவிட்டு மீண்டும் இணையும்படி கோரிக்கை முன்வைத்தவர்களிடம் ரணில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment