சற்றுமுன்னர் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புக்கள்
மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய நாளுக்கான இறுதி ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ நோக்கு பிற்பகல் 3.30க்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிகளும் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதுலுவகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை சகல நெடுஞ்சாலைகளையும் இன்று மாலை 4 மணிக்கு மூடுவதற்கு நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது.

Post a Comment