Header Ads

மற்றொரு இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா?

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருமணிநேரத்திற்குப் பிறகு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

56 வயதுடைய குறித்த பெண் கடந்த 03ஆம் திகதியே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியிருக்கின்றார்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து சிலாபம் மருத்துவமனை அதிகாரியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அனைத்து வெளிப்பாடுகளும் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.
Powered by Blogger.