Header Ads

இந்த ஆண்டு ஹஜ் கடமை இடைநிறுத்தம் - சவூதியின் விஷேட அறிவிப்பு

2020 ஹஜ் கடமை மறு அறிவித்தல் வரை, நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் கடமைகளுக்கான ஏற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு  சவுதி ஹஜ் அமைச்சகம் அறிவித்ததுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கைக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை அரச ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான சேவைகள் , ஹோட்டல்கள் மற்றும் பிரதான சேவை கம்பனிகளிக்கு முற்பணம் செலுத்தியவர்கள் அவற்றை மீள பெற்றுக்கொள்ளுமாறு சவுதி ஹஜ் அமைச்சு இலங்கை தூதுவராலயத்திற்கு அறிவித்துள்ளது.

மேலும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற முகவர்களுக்கு முற்பணம் செலுத்தியவர்கள் அவற்றினை மீள பெறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.