ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இருக்குமாயின் அந்த கம்பனிகள் தோட்டங்களை நடத்துவதை விடுத்து அரசிடமே அவற்றை ஒப்படைக்கலாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய ஜனாதிபதி , இம்மாத சம்பளத்தில் அந்த அதிகரிப்பு இடம்பெறவேண்டுமென்பதை உறுதிசெய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இலாபமில்லாமல் இருக்குமானால் கம்பனிகளை நடத்துவதில் அர்த்தமில்லையென்றும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத கம்பனிகள் அதனை எழுத்துமூலம் அரசுக்கு அறிவித்துவிட்டு கம்பனிகளை அரசிடம் ஒப்படைத்து விடுவதே நல்லதென்றும் ஜனாதிபதி இதன்போது கூறியதாக அறியமுடிந்தது.
நாளை முதலாளிமார் சம்மேளனத்துடன் ஜனாதிபதி முக்கியமான சந்திப்பை நடத்தவுள்ளாரெனவும் சொல்லப்பட்டது.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு குறித்து ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment