Header Ads

கொரோனா வைரஸ் தொடர்பில் விஞ்ஞானிகள் வௌியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்

கொரோனா வைரஸானது, இப்போதைக்கு இல்லாமல் போகக்கூடிய ஏதுநிலைகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்கபூரின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசியர்கள் 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று, தமது ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இதனைத் தெரிவித்துள்ளது.

கொரனா அல்லது கொவிட்19 வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்து, தற்போது ஈரான், வடகொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தீவிரவமாக பரவி வருகிறது.

ஈரான் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளிலும், இத்தாலி ஊடாக ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வைரஸ் மேலும் தீவிரவமாக பரவக்கூடும்.

இது இந்த ஆண்டின் இறுதிவரை தொடரும் சாத்தியம் கூட இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த வைரஸ், மூன்று வகையான நிலைமைகளுக்கு மாறக்கூடும்.

முதலாவது சார்ஸ் வைரஸ் போல, திடீரென அழிந்து போகலாம்.

இரண்டாவது பல்வேறு நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாரிய உயிரிழப்புகளை சம்பவிக்கலாம்,

மூன்றாவது எச்.வன்.என்.வன் போன்ற ஏனைய வைரஸ்களைப் போல, இதுவும் மனித குலத்துடன் தொடர்ந்து பயணிக்கலாம் என்றும் குறித்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.