Header Ads

​கொரோனா.. அடுத்தடுத்து விதிக்கப்படும் தடை உத்தரவுகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொது மக்கள் அதிகளவில் கூடும் பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும்நடத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சகல பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கும்ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுதெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படுவதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதவிர கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (16) முதல் மறு அறிவித்தல் வரையில் இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றுள் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பைன், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகியவை உள்ளடங்குகின்றன.

குறித்த நாடுகளிற்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை பெறுபேறுகளை பெறும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.