Header Ads

ஊரடங்கு நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சுப்பர் மார்கட்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கட்டுநாயக்க – குரன பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்கெட்) ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவில் இடம்பெற்றிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மா, பணம் மற்றும் தானிய வகைகள் இவ்வாறு அடையாளம் காணப்படாத நபர் ஒருவரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்த விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் தீவிரமாக நடத்திவருகின்றனர்.
Powered by Blogger.