Header Ads

மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவத்தளபதி இந்த தகவலினை உறுதிபடுத்தியுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய தினம் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த தனிமைப்படுத்த மத்திய நிலையங்கள் மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 11 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 409 ஆக  அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.