கொரோனாவின் கொடூரம் - புதிய ஆய்வில் வௌிவந்துள்ள அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது.
இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 25 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகமும் பாதிக்கிறது. ‘அக்கியுட் கிட்னி இன்ஜுரி’ என்ற கடுமையான சிறுநீரக காயம் ஏற்படுகிறது.
எனவே கொரோனா வைரஸ், பாதிப்புக்கு ஆளாகிறவரின் நுரையீரல் மட்டுமல்ல, சிறுநீரகமும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
* சார்ஸ் வைரஸ் போன்ற கொரோனா வைரஸ், சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும், புரதத்தையும் கசிய செய்கிறது. இது 15 சதவீத நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கினால் நுரையீரலை மட்டுமல்லாது, சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
Post a Comment