கொரோனா பரபரப்புக்கு மத்தியில் மனிதர்களை விண்வௌிக்கு அனுப்பும் அமெரிக்கா
சுமார் 10 வருடங்களில் முதல் தடவையாக, அமெரிக்க மண்ணிலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இருவர் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மே 27ஆம் திகதி புறப்படவுள்ளனர் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இப்பயணத்துக்கான ரொக்கெட்டும் விண்கலமும் இலோன் முஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் பொப் பேன்கேன், டக் ஹாட்லி ஆகியோர் இந்த விண்கலத்தில் பயணம் செய்யவுள்ளனர்.
இவ்விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு சுமார் 24 மணித்தியாலங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment