மஹிந்தவுக்கு அதிகாரமில்லை - விஷேட அறிக்கை வௌியிட்ட மஹிந்த
பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிரிதொரு திகதியை அறிவிக்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இன்று விஷேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாகவது, இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியிருக்கும் உலகில் எமது நாடு முகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர் முதலாவது கொரோனா நோயளர் கண்டறியப்பட்ட பின்னர் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை.
அரசியலமைப்புப் படி ஜனாதிபதியால் குறிப்படப்பட்ட திகதியில் தேர்தலை நடத்த முடியயாவிட்டால், அதற்காக வேறு திகதி ஒன்றை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது.
அவ்வாறு திகதி குறிப்பிடாமல் தேர்தலை பிற்போடுவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை என்று பிரதமர் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment