Header Ads

அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு

ஏப்ரல் 20ஆம் திகத்திக்கு பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 5 ஆயிரம் பேருந்துகள் மற்றும் 400 புகையிரதங்களை பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரச மற்றும் தனியார் துறைகளின் பணகளை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் பல கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுபோக்குவரத்தினை அத்தியாவசிய சேவையாக மாத்திரம் முன்னெடுப்பதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே மூடப்பட்ட மற்றும் ஏற்கனவே பணிகளைத் தொடங்கியுள்ள நிறுவனங்கள் குறித்து விரைவான அறிக்கையை வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் என்று திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Powered by Blogger.