Header Ads

சட்டத்தை மீறி பார்ட்டி வைத்த இராஜ் வீரரத்ன உள்ளிட்ட தேரர்கள் குழு

பௌத்த பிக்குகள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளமான யூடியூப் சனலுக்கு ஒரு இலட்சம் பயனர்கள் (Subscribers)  பெற்றதை கொண்டாடும் முகமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கேக் வெட்டி பார்ட்டி இட்ட சம்பவம் பதிவாகியிருக்கின்றது.


பிரபல பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்றிருக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்வுக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இசைக்கலைஞரான இராஜ் வீரரத்னவும் கலந்துகொண்டிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண நிகழ்வுகள், குழுவாக சேரும் எந்தவொரு விழாக்களையும் நடத்த வேண்டாம் என்ற தற்காலிகத் தடையுத்தரவை பொலிஸார் விதித்திருக்கின்ற நிலையில் இப்படியொரு சட்டவிரோத செயற்பாட்டை முன்மாதிரியாகக் திகழ வேண்டிய பிக்குகள் செய்திருக்கின்றனர்.



No comments

Powered by Blogger.