Header Ads

பௌத்த சமய பாடத்தில் A சித்தி பெற்று அசத்தியுள்ள முஸ்லிம் மாணவன்

குருநாகல் மலியதேவ கல்லூரியில் க.பொ.த சாதாரணதர பஸ்லான் எனும் மாணவன் நேற்று (27) வெளியாகிய சாராதணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று அரிதான சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.


அத்துடன் குறித்த மாணவன் 8 பாடங்களில் ‘ஏ’ சித்தியும் 1 பாடத்தில் ‘பி’ சித்தியும் பெற்றுள்ளார்.

புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து குறித்த பாடசாலைக்கு தெரிவாகிய குறித்த மாணவன் இஸ்லாம் பாடத்தை கற்பதற்கான சூழ்நிலை அந்த பாடசாலையில் கிடைக்காததன் காரணமாக புத்த சமய பாடத்தை கற்று அதில் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.