Header Ads

கொழும்பின் சில பகுதி முடக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாரஹேன்பிட்டி - தாபரே மாவத்தை, டொரிங்ன்டன் ஹெடேவத்தை மற்றும் ஹெவலோக் வீதி ஆகியன முடக்கப்பட்டுள்ளன.


கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் 4 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்புபட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த 4 பேரில் 2 பேர் நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டொரிங்டன் வத்தையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

குறித்த நபர் பண்டாரநாயக்க மாவத்தையில் தங்கிருந்து சென்றுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஹெவலொக் வீதியில் மற்றுமொருவர் கண்டறியப்பட்டிருந்தார்.

அவரின் பாரவூர்தியின் சாரதி பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ஆகவே ஒருவருடன் ஒருவருக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு உள்ளது.

எனவே இன்னும் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை அடையவில்லை.

அதேநேரம், கடற்படையினர் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.