Header Ads

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில, கர்பிணி தாய்மார்களுக்கு கீழ் வரும் நோய்கள் காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கர்பிணி பெண்கள் காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வைகுறைப்பாடு, வலிப்பு, நெஞ்சு அல்லது வயிற்று வலி, சிசுவின் அசைவில் மாற்றம், உடல் வீக்கம், மற்றும் தலைவலி உள்ளிட்ட வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் காணப்படுமாயின் கர்ப்பிணி பெண்கள் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சை பெறவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முன்பதிவுகளை செய்துக்கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.