Header Ads

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு; சடலங்களை புதைக்கலாம்

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கு தனிமைப்படுத்தல் சட்டப்படி அனுமதி இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தால் இந்த இரண்டு முறைகளையும் நடைமுறைப்படுத்தலாம் என்று உலக சுகாதார தாபனமும் கூறியுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கேவின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.