Header Ads

நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாத பலர் இருக்க கூடும் என சங்கத்தின் உப தலைவர் சாரத கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், மக்களுடன் கலந்துள்ளமையினால் அதிக ஆபத்தான நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமையினால் மக்கள் முன்னரை விடவும் மிகவும் சுகாதார பழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய கால எல்லைக்குள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மக்கள் மத்தியில் பயணிப்பதனை தவிர்த்து தங்களுக்கு அவசியமான உணவுகளை தங்கள் தோட்டங்களிலேயே பயிரிட பழகிக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.