Header Ads

புகையிரத பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் இயக்கப்படவுள்ள புகையிரதங்களில் தொழில்சார் அடையாள அட்டைகள், ஊரடங்கு அனுமதியட்டை மற்றும் புகையிரத பருவச்சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், நாளை முதல் பல்வேறு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

நேரம் அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், அலுவலக சேவைகள் வழமைபோல இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெட்டியில் 50 பேர் அளவில் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு மாத்திரம் தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.