ஈஸ்டர் தாக்குதலின் பின் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட்ட ஸஹ்ரான் குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இரண்டாவதாக மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாகவும், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
அந்த தாக்குதல் தினத்தின் பின்னரான ஒரு தினத்தில் மற்றொரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அந்த தாக்குதலுக்கு ஆதரவு வழங்கிய, ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், போதுமான சாட்சிகளின் அடிப்படையிலே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வௌிநாடு ஒன்றில் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அந்த சந்தேகநபர்களை பாதுகாப்பாக இலங்கையில் மறைத்து வைத்திருப்பதற்கும் அவர்களை இரகசியமாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மிகவும் பரந்த அளவில் விரிவாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
Post a Comment